ETV Bharat / state

ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த விபரீதம்!

author img

By

Published : Oct 10, 2021, 4:11 PM IST

Updated : Oct 11, 2021, 9:14 AM IST

வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் ரம்மி  ரம்மி  ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை  தற்கொலை  திருப்பத்தூரில் இளைஞர் தற்கொலை  திருப்பத்தூரில் ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை  online rummy  rummy  young man committed suicide  suicide  thirupattur news  thirupattur latest news  young man committed suicide by hanging  young man committed suicide by hanging for online rummy
ஆன்லைன் ரம்மி

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த புருஷோத்தம குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி இளைஞர், ஆனந்தன் (28). இவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வீட்டிற்கும் பணம் கொடுக்காமல், பல லட்சம் ரூபாய் இழந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 9) ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு செய்வதற்காக தனது கிராமத்திற்கு வந்துள்ளார்.

அப்போது தாய் மற்றும் சகோதரர் அவரை வீட்டிற்குப் பணம் கொடுக்காததாலும் ஆன்லைனில் ரம்மி விளையாடி கடனில் இருப்பதாலும் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால், மனம் உடைந்த இளைஞர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த விபரீதம்

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று, ஆனந்தனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் கனமழை; சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழப்பு!

Last Updated : Oct 11, 2021, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.