ETV Bharat / state

அரசு தொடக்கப் பள்ளியில் மகளிர் தின கொண்டாட்டம்

திருப்பத்தூர்: அரசு தொடக்கப்பள்ளியில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

author img

By

Published : Mar 8, 2020, 3:04 PM IST

அரசு தொடக்கப்பள்ளியில் மகளிர் தினம் கொண்டாடும் காட்சி

திருப்பத்தூர் மாவட்டம், ராஜாவூர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மகளிர் தினத்தை முன்னிட்டு, அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஓட்டப் பந்தயம், கோணிப்பை பந்தயம், பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி என 10க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் வென்ற பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டிகள் அனைத்தும் ராஜாவூர் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா தலைமையில் நடைபெற்றது.

அரசு தொடக்கப்பள்ளியில் மகளிர் தினப் போட்டிகள்

மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும், இந்திரா தன் சொந்த செலவில் ஊக்க பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: 24/7 இலவச வைஃபை வழங்கும் மாநகராட்சி பூங்கா: குஷியான பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.