ETV Bharat / state

தேர்வு எழுத அனுமதிக்காததால் கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண் - College student

வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் BA தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி காமாட்சி பிரசவ விடுப்பு எடுத்திருந்த நிலையில், அவரை தேர்வு எழுத அனுமதிக்கமுடியாது என கல்லூரி நிர்வாகம் கூறியதால், இளம்பெண் கைக்குழந்தையுடன் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தேர்வு எழுத அனுமதிக்காததால் கைகுழ்ந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்

author img

By

Published : Jun 6, 2022, 10:14 PM IST

ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த ஆயிலம் குமணந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த கோபி (30) என்பவரின் மனைவி இளம்பெண் காமாட்சி(25). இவர் வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ.தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த சில மாதங்களாக பிரசவவிடுப்பில் இருந்த காமாட்சி, குழந்தை பெற்ற பின் மீண்டும் கல்லூரிக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது கல்லூரி நிர்வாகம், நீண்ட விடுப்பு எடுத்ததால் தேர்வு எழுத முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து காமாட்சி, தனது கைக்குழந்தையுடன் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட காமாட்சியிடம் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனைத்தொடர்ந்து திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு அலுவலருக்கு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டி, கடிதம் எழுதி கல்லூரி முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர் அங்கு இருந்து கலைந்து சென்றார்.

தேர்வு எழுத அனுமதிக்காததால் கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்

மேலும் கல்லூரி மாணவிகள் பேறு கால விடுப்பின்போது வருகைப்பதிவு கணக்கிடாமல் கருணை அடிப்படையில், மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐ.பி.ஓ. வெளியீட்டுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.