ETV Bharat / state

திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் - போலீஸில் புகார் - திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர்

வாணியம்பாடி அருகே திருமண செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்பமாக்கிய இளைஞருடன், தன்னை சேர்த்துவைக்கக் கோரி இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர்

author img

By

Published : Mar 26, 2022, 9:52 AM IST

திருப்பத்தூர்: சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் தனது தோழியின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒரு வருடம் கோயமுத்தூர் பகுதியில் வேலை பார்த்து வந்த நிலையில் முருகன் ஜோதியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி ஜோதியை திருமணம் செய்வதாக கூறி முருகன் வாணியம்பாடி பகுதியிற்கு அழைத்து வந்து தனியாக தங்க வைத்துள்ளார். பின்னர், ஜோதி, முருகனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை எடுக்காமல் தலைமறைவாகியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த ஜோதி, முருகனின் வீட்டிற்குச் சென்று, முருகனின் பெற்றோரிடம் தானும் முருகனும் காதலிப்பதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த முருகனின் பெற்றோர், உறவினர்கள் ஜோதியை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஜோதிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜோதி புகார் அளித்தார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி விசாரணை நடத்திய பின்னர் அந்த இருவரும் தாங்கள் சேர்ந்து வாழ்வதாக கூறி கடிதம் எழுதி காவல் நிலையத்தில் அளித்துவிட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகைக்கு பாலியல் தொல்லை - இயக்குநர் மீது டிஜிபி-யிடம் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.