ETV Bharat / state

பாலாற்றில் வெள்ளம் வர வாய்ப்பு: மக்களுக்குத் தண்டோரா எச்சரிக்கை! - Warning to the public by Tandora on behalf of Udayendram Municipality

திருப்பத்தூர்: ஆந்திராவில் பெய்துவரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதால், உதயேந்திரம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்குத் தண்டோரா மூலம் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.

thandaora
thandaora
author img

By

Published : Dec 6, 2020, 6:43 AM IST

கடந்த சில நாள்களாக ஆந்திராவில் பெய்துவரும் கனமழையால் குப்பம் பகுதியில் உள்ள பேத்தமங்கலம் ஏரி நிரம்பிவருகிறது. ஏரியின் மதகில் வெளியேற்றப்படும் நீரானது, ஆந்திராவில் உள்ள காட்டாற்று வழியாகப் பாலாற்றில் கலக்கிறது.

இதனால், வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பகுதியில் வெள்ளம் வர வாய்ப்புள்ளது. அதன்படி உதயேந்திரம் பேரூராட்சி சார்பில் உதயேந்திரம், மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்குத் தண்டோரா மூலம் வெள்ள எச்சரிக்கைவிடப்பட்டது.

பாலாற்றில் வரும் வெள்ளத்தில் சிறுவர்கள் குளிக்கச் சென்று ஏற்கனவே உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதால், சிறுவர்கள் பாலாற்று வெள்ளத்தில் குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: மெய்நிகர் பொம்மை கண்காட்சியில், பாதுகாப்பான உள்நாட்டு பொம்மைகள் வாங்கலாமே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.