திருப்பத்தூர், மாவட்டம் ஆம்பூரில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றும் 40க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியை முடித்துவிட்டு தொழிற்சாலைக்கு சொந்தமான வாகனத்தில் வழக்கம் போல் வீடு திரும்பியுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த பாப்பனப்பள்ளி அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் வாகனத்தில் பயணம் செய்த 35 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக அளவு பணியாட்களை வேனில் ஏற்றி வந்ததே விபத்திற்கு காரணம் எனக்கூறி பொதுமக்கள் விபத்துக்குள்ளான மினிவேனை எடுக்க விடாமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இவ்விபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Exclusive: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை; பின்னணி என்ன?