திருப்பத்தூர்: ஆம்பூர் கம்பிகொள்ளை பகுதியைச் சேர்ந்த தில்லைநாதன், ஆகாஷ் ஆகிய இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில், மின்னூர் பகுதியிலுள்ள சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது எதிரேவந்த வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவரின் இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு இருசக்கர வாகனங்களும் தூக்கி வீசப்பட்டது.
இதில், இருசக்கர வாகனத்தில் பயணம்செய்த ஆம்பூர் கம்பி கொல்லை பகுதியைச் சேர்ந்த தில்லைநாதன், வாணியம்பாடியைச் சேர்ந்த ரியாஸ் உள்பட மூன்று பேரும் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபல நகைக் கடை பெயரில் போலி ரசீது - காவல்நிலையத்தில் புகார்!