திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் பாரதி நகர் பகுதியில் நேற்றிரவு(ஆக.5) சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் இருவர் மது அருந்தியுள்ளனர்.
அவர்கள் பொது இடத்தில் மது அருந்தியதால் அங்கு ரோந்து பணியிலிருந்த ஆம்பூர் ஊர்க்காவல் படை வீரர் அருண் என்பவர் அங்கிருந்து செல்லும் படி கூறினார்.
அதில் ஆத்திரமடைந்த இருவரும் மது போதையில் காவலரை சரமாரியாக தாக்கினர். அதையடுத்து ஆம்பூர் கிராமிய காவல்நிலைத்திற்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் போதை ஆசாமிகள் இருவரையும் கைது செய்தனர். அதன்பின் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சுரேஷ், சிவக்குமார் என்பதும் இருவரும் மாதனூர் எம்எம் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அம்மன் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை திருடிய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த மக்கள்!