திருப்பத்தூர்: வாணியம்பாடி ஜீவா நகரில் செப்டம்பர் 10ஆம் தேதி மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தனது ஏழு வயது குழந்தையுடன் சென்று தொழுகை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத எட்டு பேர் கொண்ட கும்பல் அவரை படுகொலை செய்து விட்டு துப்பிச்சென்றது.
இது தொடர்பாக வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி பாபு தலைமையிலான மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முக்கிய நபரான டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கூலிப்படை தலைவனான செல்லா என்கின்ற செல்வகுமார், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், அஜய், பிரவின்குமார் ஆகிய ஆறு பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்திலும், ஒருவர் எழும்பூர் நீதிமன்றத்திலும், மற்றொருவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் என மொததம் ஒன்பது பேர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய 21 பேர் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளி முத்துவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர், சேலம் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
இந்நிலையில் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் என்பவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது அடிதடி, கொலை, கஞ்சா உள்ளிட்ட நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனால், அவரையும், அவரது கூட்டாளியான பைசல் அஹமது என்பவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராம்குமார் உடலில் இருந்தது மின்காயங்களே.. உடற்கூராய்வை கண்காணித்த மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்