திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர், நவமணி. இவர் விவசாயம் மற்றும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஈச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வி, சுமதி, ஜெகன் ஆகியோர் நவமணியிடம் நண்பர்களாகப் பழகி ரூ.31 கோடி பணம் மற்றும் 150 சவரன் தங்க நகைகள் புதையலாக இருப்பதாகக் கூறியும், பணம் செலவு செய்தால் அதனை எடுக்க முடியும் என ஆசை வார்த்தைகளைத் தெரிவித்தும், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இன்று வரை நவமணியிடம் ரூ.3000 ரூபாயில் தொடங்கி சுமார் ரூ.56 லட்சம் ரூபாய் வரை, அவ்வப்போது பல தவணைகளில் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இது சம்பந்தமாக நவமணி பணம் கொடுத்து, ஏமாந்த செல்வி மற்றும் சுமதியிடம் பலமுறை புதையல் குறித்துக்கேட்ட போது நீதிபதி, வழக்கறிஞர்கள் போன்று தொலைபேசியில் பேசி பதில் அளித்து வந்ததால் சந்தேகமடைந்த நவமணி சம்பவம் குறித்து காவல்துறை இயக்குநர், காவல் துறைத்தலைவர் முதல் கிராமிய காவல் நிலையம் வரை இணையவழி மூலம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விஞ்ஞான ரீதியாகப் பல்வேறு துறையில் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், புதையல் இருப்பதாகக் கூறி, ஏமாற்றி வரும் நபர்களிடம் அப்பாவி மக்கள் ஏமாந்து வரும் நிலை தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவத்தால் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'வலிமை' பட பாணியில் பைக் வீலிங்: தொக்காக சிக்கும் இளைஞர்கள்