திருப்பத்தூர்: ஆரிப்நகர் நகராட்சிக்குள்பட்ட பகுதி ஆகும், இப்பகுதியில் பொதுவாகவே சேரும் சகதியுமாகக் காணப்படும். அப்பகுதியில் உள்ள கால்வாய் சரிவரத் தூர்வாரப்படாமல் இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கழிவுநீர் ஆரிப் நகர்ப் பகுதியிலேயே தங்கிவிடுகிறது.
இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி நகராட்சிக்கு ஆரிப் நகர் மக்கள் இப்பகுதியிலிருந்து கால்வாய் அமைத்து மாடப்பள்ளி செல்லும் கால்வாய்க்குக் கழிவுநீர் செல்ல வழிவகைச் செய்ய வேண்டும் எனப் பலமுறை புகார் அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாகத் திருப்பத்தூர் பகுதிகளில் கனமழை, லேசான மழை பெய்துவருகிறது. எனவே ஆரிப் நகர்ப்பகுதியில் பொதுவாகவே சாக்கடைகள் தேங்கி நிற்கும் அவலம் உள்ளது. ஆனால் தற்போது பெய்த மழையால் ஆரிப் நகர் முழுவதும் சாக்கடையில் மழைநீர் தேங்கி வீட்டிற்குள்ளேயே கழிவு நீர் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் ஆட்சியரைக் கண்டித்து தமுமுகவினர் சாலை மறியல்
திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தமுமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.