ETV Bharat / state

பணத்த கொடு... இல்லனா உன் போட்டோவ ஆபாசமா மார்பிங் செய்வோம்.. மூன்று இளைஞர்கள் கைது... - woman blackmailing photo morphing in tirupattur

ஆம்பூரில் புகைப்படத்தை வைத்து ஆபசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி இளம்பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்து வந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

three-youths-arrested-for-blackmailing-woman-in-ambur

author img

By

Published : Mar 25, 2022, 7:46 AM IST

Updated : Mar 25, 2022, 1:32 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்ணுக்கும் அதேபகுதியை சேர்ந்த ஷேக் இஸ்மாயில், முகமது ஜைனு மற்றும் சாதம் உசேன் ஆகிய மூன்று பேருக்கும் அண்மையில் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஒன்றாக வெளியில் செல்லும்போது புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இதனை பயன்படுத்திக்கொண்ட மூன்று ஆண் நண்பர்களும் உன் புகைப்படத்தை வைத்து மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம். அதை செய்யாமலிருக்க நீ பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி அந்த பெண்ணிடம் பணம் பெற்றுவந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் துணிந்த அந்த பெண் மூன்று பேர் மீதும் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மூன்று இளைஞர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபோல பணம் கேட்டு மிரட்டும் இளைஞர்களுக்கு பயப்படாமல் தைரியமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று பெண்களுக்கு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: விஸ்வாசம் கதை போல் ஒரு சம்பவம்: அரசியல்வாதி அழுத்தத்தால் பள்ளி மாணவி தற்கொலை

Last Updated : Mar 25, 2022, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.