திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்கொத்தகுப்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் விவசாய நிலங்களில் இருந்து குடியிருப்புக்குள் புகுந்த மூன்று பாம்புகள், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் வீட்டு சமையலறைக்குள் புகுந்து பதுங்கிஇருந்தது.
இதனைக் கண்ட அவரது மனைவி அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த அசோக் என்ற பாம்பு பிடிக்கும் இளைஞரை அழைத்து வந்தனர்.
அவர், ஒருமணி நேரத்திற்கு மேலாக போராடி, சுமார் ஐந்து அடி நீளமுள்ள இரண்டு சாரைப்பாம்பு மற்றும் ஒரு மண்ணுளி பாம்பு உள்ளிட்ட மூன்று பாம்புகளை லாவகமாக பிடித்துச் சென்றார். அந்தப் பாம்புகளை, அங்குள்ள மாச்சம்பட்டு காப்புகாடு வனப்பகுதிக்குள் விட்டனர்.