திருப்பத்தூர்: வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரே வணிக வளாகத்தின் அருகே, பாஜகவினர் பேனர் வைத்துள்ளனர். அவர்கள், அங்குள்ள ராஜீவ் காந்தி சிலையை மறைத்து பேனர் வைத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இரு தரப்பினரிடமும் சமரசம் பேசி பேனரை அகற்றியதால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.