ETV Bharat / state

உயிரிழந்த குரங்கு குட்டியை எடுத்துச் செல்லும் தாய் குரங்கு: கண்கலங்கவைக்கும் காட்சி - ப்ளூ கிராஸ்

திருப்பத்தூர்: ஏலகிரி மலைப் பாதையில் வாகனத்தில் சிக்கி உயிரிழந்த குரங்கு குட்டியை தாய் குரங்கு எடுத்துச்செல்லும் காட்சி பார்ப்போரை கண்கலங்கவைத்துள்ளது.

The mother monkey carrying the dead baby monkey: a spectacle

author img

By

Published : Feb 8, 2021, 8:16 AM IST

Updated : Feb 8, 2021, 9:09 AM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. இங்குள்ள படகு சவாரி, பூங்கா, டிரக்கிங், பறவைகள் சரணாலயம் போன்றவற்றைக் காண்பதற்குப் பெருநகரங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்துசெல்வது வழக்கம்.

கரோனா காலத்தில் சுற்றுலாத் தலங்களுக்குப் பார்வையாளர்கள் வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கம்போல வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்துசெல்வது அதிகரித்துள்ளது.

ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையில் பயணிக்கும்போது, அப்பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கும் குரங்குகளுக்கு ஏராளமான உணவுப் பண்டங்கள், பழங்கள் போன்றவற்றை சாலைகளில் வைத்துவிட்டுச் செல்கின்றனர்.

அந்த நேரத்தில் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் பொழுதே உணவுப் பண்டங்கள், பழங்களை வீசிவிட்டுச் செல்வதால், அதை எடுப்பதற்கு குரங்குகள் கூட்டம் கூட்டமாக வரும் சமயத்தில் வாகனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிடுகின்றது.

அப்படி சில நாள்களுக்கு முன்பு வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்துபோன குரங்கு குட்டியை, அது இறந்ததுகூட தெரியாமல் தாய் குரங்கு தன் கூடவே தரதரவென்று இழுத்துக்கொண்டு அலையும் காட்சி சாலையில் கடந்துசெல்வோரை கண்கலங்கச் செய்தது. தற்போது அதேபோல் மற்றொரு குரங்கு விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர்விட்ட சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.

ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக இருப்பதால் கொண்டை ஊசி வளைவுப் பாதைகள் ஏராளமாக உள்ளன. குரங்குகள் ஆங்காங்கே அமர்ந்துகொண்டும் சாலையில் வாகனங்களைப் பார்த்துக்கொண்டும் மரங்களுக்கு மரம் தாவிக்கொண்டும் இருக்கின்றன.

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வரும் வளைவு வழிகளில் குறுக்கும் நெடுக்குமாக வரும் குரங்குகளின் மீது மோதி விபத்து ஏற்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இதுபோன்ற வனவிலங்குகளின் விபத்து குறித்து வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வளைவுப் பாதைகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகள் எழுதிவைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கைவிடுக்கின்றனர்.

உயிரிழந்த குரங்கு குட்டியை எடுத்துச் செல்லும் தாய் குரங்கு

இயற்கையின் நியதிப்படி ஒன்றைச் சார்ந்து ஒன்று சாறுண்ணியாகவே நாம் இருக்கின்றோம். அந்தச் சுழற்சியில் ஏதோ ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டால் மொத்த சுழற்சியே கெட்டுப்போய் அழிந்துவிடும் என்கிற உண்மையை உணர்ந்து தீர்வு கிடைத்தால் நலமாயிருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. கழுகு பார்வையில் திருச்சி!

Last Updated : Feb 8, 2021, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.