திருப்பத்தூர்: ராமசாமியார் பகுதியில் உள்ள தேசத்து மாரியம்மன் கோயில், திம்மனா முத்தூர் ஊராட்சி பசலிக்கொட்டை பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ பாட்டை மாரியம்மன் ஆலயம் என ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று கோயில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
ராமசாமியார் பகுதியிலுள்ள தேசத்து மாரியம்மன் கோயிலில், தாலிக் கயிறு குண்டு குழாய் என சுமார் 5 சவரன் நகை, சுமார் ௨௦ ஆயிரம் ரூபாய் பணம், பசலிக்கொட்டை பகுதியில் உள்ள இரண்டு ஆலயங்களில் சுமார் 15 சவரன் நகை ஒரு லட்சம் ரூபாய் பணம் என மொத்தம் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும், சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூன்று ஆலயங்களிலும் உண்டியலைத் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் ஒரே பாணியில் உண்டியலில் உள்ள பணம் மற்றும் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு சில்லறைக் காசுகளை எண்ணுவதற்குச் சோம்பேறித்தனப்பட்டு அவற்றை சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர்.
மேலும், உண்டியல் கொள்ளை சம்பவம் குறித்து நகரக் காவல் நிலையத்திலும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் பைக்கில் இருந்து பெட்ரோல் திருட்டு - வெளியான சிசிடிவி காட்சி!