திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் காவலர்கள் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை எனவும், இதற்கு காரணம் ஆயுதப்படைக்கு புதியதாக பொறுப்பேற்று உள்ள துணை காவல் கண்கணிப்பாளர் விநாயகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவலர்கள் தங்கள் திருமணத்திற்கு 30 நாட்கள் விடுப்பு கேட்டால் 7 நாட்கள் தருவது, மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் விடுப்பு கேட்டால் 2 நாட்கள் தற்செயல் விடுப்பு தந்து Guard பணிக்கு அனுப்புவது என காவலர்கள் கூறுகின்றனர்.
மேலும் வாரந்திர ஓய்வு கேட்டால் அந்த மனுவை முகத்தில் தூக்கி வீசிவிட்டு அநாகரிகமாக பேசி இல்லை என்று சொல்வதாகவும், அதற்கு மேல் எங்கள் விடுப்பை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்கும் காவலர்களை Memo கொடுத்து சம்பளம், பதவி உயர்வு வராமல் செய்து விடுவேன் என்று மிரட்டுவதாக கூறுகின்றனர்.
ஆயுதப்படையில் அடிப்படை வசதியான தங்கும் இடம், கழிவறை எதுவும் இல்லை என்றாலும் பணி முடித்து மாலை வரும் காவலர்களை வீட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே தங்க வைப்பது என காவலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு காரணம் DSP விநாயகம் தான் முழு பொறுப்பு என ஆயுதப்படை காவலர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு!