திருப்பத்தூர்: விஷமங்கலம் பகுதியில் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மழலைச் செல்வங்கள் இங்கு பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் நேர் எதிரே தனியாருக்குச் சொந்தமான பூவில் இருந்து சென்ட்(வாசனை திரவியம்) தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சென்ட் தயாரிக்கும் பயன்படுத்தப்படும் ஒரு வகையான ரசாயனம் கலந்த நச்சுத்தன்மை வாய்ந்த வாய்வினால், காற்றில் கலந்து மாணவ மாணவிகள் மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுகின்றனர் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் இன்று பெற்றோர் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் திடீரென திருப்பத்தூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: உயிரோடு இருப்பவருக்கு இறப்புச்சான்றிதழ் கொடுத்த அலுவலர் - இது விழுப்புரம் சம்பவம்!