ETV Bharat / state

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

author img

By

Published : Aug 8, 2022, 7:31 PM IST

கோணாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

திருப்பத்தூர்: கோணாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பள்ளியின் வளாகம் சேரும் சகதியுமாக மாறியது.

மாணவர்கள் போராட்டம்

அதன் நிர்வாகத்தினர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பள்ளி வளாகத்தில் மண் கொட்ட அனுமதி வாங்கியுள்ளனர். பள்ளியின் சார்பில் ஆட்களை வைத்து அங்கு மண்ணை கொட்டும் பணி நடந்தது.

அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் மண் கொட்ட கூடாது என பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாணவர்கள் பள்ளியின் வெளிய அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வகுப்பிற்குள் செல்ல வைத்தார். இதுகுறித்து சம்பந்தபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 'இந்தியா முதல் இடத்திற்கு வர வேண்டும்' - செஸ் வீராங்கனை சிகப்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.