ETV Bharat / state

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!

author img

By

Published : Dec 19, 2020, 9:30 PM IST

திருப்பத்தூர்: மாடப்பள்ளி கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகன் சஞ்சய் (15), அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது சஞ்சய்க்கு நீச்சல் தெரியாத நிலையில், கிணற்றில் குதித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி மாணவனின் உடலை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

உயிரிழந்த சிறுவன்
உயிரிழந்த சிறுவன்

பின்னர், உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 20 மணி நேர போராட்டம்... ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.