ETV Bharat / state

'காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்' - இறைஞ்சும் சரத்குமார்

திருப்பத்தூர்: அனைவரின் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன். ஓட்டுக்கு பணம் மட்டும் வாங்காதீர்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தல் பரப்புரையின் போது கேட்டுக்கொண்டார்.

sarath kumar election campaign
sarath kumar election campaign
author img

By

Published : Mar 27, 2021, 6:48 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் மநீம கூட்டணியின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "மக்களிடம் பணத்தை அள்ளி கொடுத்து விட்டு அவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய சக்தி உருவாக வேண்டும். இப்போ இல்லையென எப்போ என்ற நிலைதான் தற்போது உருவாகி இருக்கிறது.

அதிமுக, திமுக, தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது. தேர்தல் வரும் போது மட்டும் அறிக்கை வரும். அதற்கு பிறகு வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுவர். 25 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். அதிமுகவுடன் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பயணித்தோம்.

ஆம்பூர் தொகுதி வேட்பாளர் ராஜாவை ஆதரித்து சரத்குமார் பரப்புரை
பத்து ஆண்டுகாலம் பயணித்த பிறகு நமக்கென்று வாக்குவிகிதம் என்னவென்று தெரியாமலேயே சென்று விட்ட காரணத்தினால், ஓர் புதிய கூட்டணியில் இணைந்துள்ளோம். நாங்கள் தொழில் செய்ய வரவில்லை, பணம் சம்பாதிக்க வரவில்லை.

ஆனால் மஞ்சள் பையை தூக்கி கொண்டு வந்தவர்கள், எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இளைஞர்கள் ஒன்று கூடி புரட்சி வெடித்தது போல இந்தத் தேர்தலிலும் புரட்சி வெடிக்கும்.
அனைவரின் வீட்டிற்கு வந்து காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன். ஓட்டுக்கு பணம் மட்டும் வாங்காதீர்கள்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.