ETV Bharat / state

திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரசார் போராட்டம்

திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாவட்ட காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரசார் போராட்டம்

author img

By

Published : Nov 24, 2020, 7:55 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலை முன்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.

சுமார் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பல வருடங்களாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. பல உயிர்களை காவு வாங்கிய இந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனிமுத்து தலைமையிலான காவல் துறையினர், அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சாலை வசதி: பழங்குடியின இளைஞர்கள் தொட்டில் கட்டி நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.