திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக பருவ மழையை எதிர்கொள்ளும் நிலையம், மழைக் காலங்களில் நீர் நிலைகளில் ஏற்படும் பேரழிவை தடுக்கும் வகையில் மாதிரி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒத்திகையானது வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் முன்னிலையில் நீர் நிலைகளில் ஏற்படும் பேரழிவைத் தடுக்க எவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை சார்ந்தவர்கள் மாதிரி ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து ஒத்திகையை கண்டனர்.