திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்து வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் வருவாய் துறையினர் ஜாப்ராபாத் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பத்தாபேட்டை செல்லும் சாலையோரமாக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அங்கிருந்து சுமார் 2 டன் ரேஷன் அரிசியை கைப்பற்றி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை வாணியம்பாடி நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தனியார் பேருந்தும் லோடு ஆட்டோவும் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு