ETV Bharat / state

கோடையில் கொட்டிய ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

author img

By

Published : Apr 8, 2020, 3:09 PM IST

திருப்பத்தூர், சேலம் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

Rain in TN
Hailstones Rain in TN

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே கரோனோ வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டிருப்பதால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.

இதையடுத்து இப்பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. ஆம்பூர் பகுதியை அடுத்த வீராங்குப்பம், மேல் சான்றோர் குப்பம், குமாரமங்கலம் பகுதிகளில் ஆலங்கட்டி மழையாக பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Rain in Tirupattur district

அதேபோல் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தைப் போல் சேலத்திலும் பகல் பொழுதில் வெயில் சுட்டெறித்த நிலையில், மாலைப் பொழுதில் கருமேகம் சூழ்ந்துகொண்டு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அத்துடன் பலத்த சூறைக்காற்றும் வீசியதில் சாலைகளில் புழுதி பறந்தது. காற்றின் வேகம் தாங்காமல் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

இதனைத்தொடர்ந்து கனமழை கொட்டத் தொடங்கியது. மழையின் காரணமாக சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த சூழல் காணப்பட்டது . நகரிலுள்ள பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

சேலத்தில் மழை

சேலத்தை அடுத்த ஓமலூர், அயோத்தியாபட்டினம், காரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பலத்த இடியுடன் மழை பெய்தது‌. கடும் வெயில் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், தற்போது பெய்த மழை நீரை பொதுமக்கள் பலர் தங்களது வீட்டிலுள்ள தொட்டிகளில் பிடித்து வைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல்லில் மழை

கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த கனமழையால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.