ETV Bharat / state

நாடோடி இனப்பெண்ணின் உடலை அடக்கம் செய்த பெண் காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு! - நாடோடி இனப் பெண்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நாடோடி இனப் பெண்ணை, அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில், பெண் காவலர் ஒருவர் அப்பெண்ணை அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

gypsy-woman
gypsy-woman
author img

By

Published : Nov 24, 2020, 6:31 PM IST

திருப்பத்தூர்: திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் ராமு (27). இவரது மனைவி புஷ்பா (20). இருவரும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தனர். கணவன், மனைவி இருவரும் வரும் வருமானத்தில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் இரண்டு குழந்தைக்குத் தாயான புஷ்பா தினமும் மது அருந்தி விட்டு, சரியாக சாப்பிடாத காரணத்தால், அவரின் உடல் உறுப்புகள் சேதமடைந்தன. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட புஷ்பா சிகிச்சைக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர், உயிரிழந்தார்.

அடக்கம் செய்ய தங்களிடத்தில் வசதி இல்லை என்று கூறி, புஷ்பாவின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. இதனைப் பார்த்து, அப்போது மருத்தவமனைப் பணியில் இருந்த பெண் காவலர் ஆதிலட்சுமி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை உதவியுடன் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தில் ஏற்றி, திருப்பத்தூர் கல்லறைமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தார்.

பெண் காவலரின் இந்த மனிதநேய செயலை, அப்பகுதிவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் முன்விரோதத்தால் இளைஞர் கொலை: 7 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.