திருப்பத்தூர்: வேலூர் விருப்பாச்சிபுரம், வாணியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (27). இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு, ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை நகைக்காக கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், 2017ஆம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வேல்முருகன், கடந்த 15ஆம் தேதி பரோல் கேட்டு 5 நாள்கள் பரோலில் வீட்டுக்கு சென்றுள்ளார்.
நேற்று (ஜூலை19) மாலையோடு பரோல் முடிந்து அவர் சிறைக்கு வந்திருக்க வேண்டும். இதுவரை சிறைக்கு திரும்பாததாலும், வீட்டில் ஆள் இல்லாததாலும் வேல்முருகன் தலைமறைவாகி இருப்பதாக வேலூர் மத்திய சிறைதுறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறைதுறையின் புகாரையடுத்து பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய அலுவலர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை