திருப்பத்தூர் மாவட்டம் கௌதமபேட்டையைச் சேர்ந்தவர் சங்கர் (62). இவர், கொலை வழக்கில் திருப்பத்தூர் நகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த மே 6ஆம் தேதி சங்கருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் (RTPCR) பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த மே 25ஆம் தேதி கரோனா தொற்றிலிருந்து மீண்டார். பின்னர், அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று (மே 28) இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.