ETV Bharat / state

கழிவுகளை சுத்திகரிக்காமல் பூமிக்கு அடியில் விட்ட தோல் தொழிற்சாலை பவர் கட்.. திருப்பத்தூரில் அதிகாரிகள் அதிரடி!

author img

By

Published : Jun 23, 2023, 10:04 PM IST

தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையில், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் குழி வெட்டி நிலத்தில் தேக்கி வைத்திருந்த தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து ஆலைக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Vaniyambadi leather factory
வாணியம்பாடி தோல் நிறுவனம்

சீல் வைக்கப்பட்ட தோல் தொழிற்சாலை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உஸ்மானியா இண்டஸ்டீரிஸ் என்னும் தனியார் தோல் தொழிற்சாலையில், தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பிச் சுத்திகரிப்பு செய்யாமல், தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ளேயே குழி வெட்டி கழிவுநீரைத் தேக்கி வைத்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.

மேலும், உஸ்மானியா இண்டஸ்டீரிஸ் எனும் தனியார் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையில், அபாயகரமான பொருட்களைக் கையாளுவதற்கான உரிமம் பெறப்படாமல், அவற்றைப் பயன்படுத்தி வந்ததும் அதிகாரிகள் நடத்திய சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதிக்கும் வகையில் தோல் கழிவுநீரைத் தேக்கி வைத்தற்காகவும், அபாயகரமான பொருட்களைப் பயன்படுத்த அனுமதி பெறாதற்காகவும், உஸ்மானியா தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பைத் துண்டித்து, தொழிற்சாலை மூட உத்தரவு பிறப்பிக்குமாறு திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

இதையும் படிங்க: Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா டிஸ்மிஸ்.. பஸ் உரிமையாளர் விளக்கம் என்ன?

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணனில் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உஸ்மானியா தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து உஸ்மானியா தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தோல் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கழிவு நீரையோ அல்லது திடக்கழிவுகளையோ நிலத்தின் மேல் அல்லது நீர் நிலைகளில் வெளியேற்றினால், அந்நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தொழிற்சாலையை மூட உத்தரவு பிறக்கப்படும் எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் மிகுந்த அளவில் தோல் பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதிகளில் செயல் பட்டு வரும் அனைத்து தோல் பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, தொழிற்சாலைகளின் மீது தக்க நடவடிக்கைகள் எடுத்தால் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவது மிகவும் குறையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க முடிவு - மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.