ETV Bharat / state

நாட்றாம்பள்ளியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கைவரிசை! நகை, பணம் கொள்ளை! - police investigation on house theft in tirupattur

நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூரில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய திருட்டு நபர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 9:51 PM IST

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பொரிகார வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள். இந்த தம்பதியினரின் மகன் வெங்கடபெருமாள். இவருக்கு ஜெயசரலி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் ஆகிய நிலையில், வெங்கடபெருமாள் மற்றும் ஜெயசரலி, ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளனர். இதனால் வெங்கடபெருமாள் வீட்டையும் அவரது தந்தை பெருமாள்சாமியே பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (டிச.14) இரவு வீடு பூட்டி இருந்ததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த மூன்று சவரன் தங்க நகை மற்றும் 45ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், கால் கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாள்சாமி இதுகுறித்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று கேத்தாண்டப்பட்டி அடுத்த சாவடிவட்டம் பகுதியை ரவி (வயது 55) என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் பில்டிங் காண்ட்ராக்டராக ரவி வேலை செய்து வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவரும் சென்னையிலேயே தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் ரவி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த கால் கொலுசை திருடிச் சென்றதாக கூறப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் அம்பலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டறம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சேலம் விவசாய தோட்டத்தை சுற்று வளைத்த விஷ வண்டுகள்.. விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.