திருப்பத்தூர்: ராஜிவ்காந்தி வழக்கில் 32 ஆண்டுகாலம் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் 28ஆம் தேதி முதல் தற்போது வரை 9 மாத காலமாக பரோல் வழங்கப்பட்டு, வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு நேற்று (மார்ச் 10) பிணை வழங்கப்பட்டது.
இதுகுறித்து அவரது தாயார் அற்புதம்மாள் அளித்த பேட்டியில், "31 ஆண்டுகாலப் போராட்டம் ஏறத்தாழ முடிவிற்கு வந்துள்ளது. வீட்டுச் சிறையில் இருந்து வெளியில் நடமாடலாம் என்ற சுதந்திரம் தற்போது கிடைத்துள்ளது.
மண வாழ்க்கை குறித்த யோசனை
நான் இதுவரையில் என் மகன் நிரபராதி என்று கூறிவந்தேன். இன்று வரை அவனுக்கு எதிராக அதிகாரம் வேலை செய்கிறது. விரைவில் சுதந்திர மனிதனாக அவன் வெளியில் வருவான்.
அதனைத்தொடர்ந்து அவனுக்கு ஓர் திருமண வாழ்க்கை அமைக்க நான் முயற்சித்து வருகிறேன். மேலும், என் மகனுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான் - முதலமைச்சர் ஸ்டாலின்