திருப்பத்தூர்: கந்திலி ஒன்றியம் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் தனிநபர்கள் மணல் அள்ளுவதை கண்டித்து ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு
இலக்கிநாயக்கன் பட்டி ஊராட்சியில் உள்ள நீர் பிடிப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கருக்கும் மேலான புறம்போக்கு நிலத்தில், பல வருடங்களாக சின்னசாமி, குள்ளப்பன், சங்கர், பெருமாள், சின்னவன் உள்ளிட்ட பல பேர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னசாமி என்பவர் தான் அனுபவித்து வந்த சுமார் ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் இருந்த மணல் மற்றும் மண்ணை அரசு அனுமதியின்றி எடுத்துச் சென்று விற்பதாக ஊர் பொதுமக்கள் குற்றச்சாட்டை எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள், பெண்கள் மணல் அள்ளி குட்டைகளாக தேங்கி இருக்கும் இடத்தில் விழுந்து உயிர் பலி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக கருதி உடனடியாக மணல் அள்ளுவதற்கு தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் பொதுமக்களிடம் சமரசம் பேசியதின் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.
இதையும் படிங்க:ஏலச்சீட்டில் பணம் ஏமாற்றம் - மோசடி கும்பலுடன் துணை போகிறதா காவல் துறை?