திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் பழனி. இவர், மாதனூர் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பில் பங்கேற்றார்.
அதன்பின்னர் காவல் நிலையம் திரும்பிய பழனி, ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் எழுத்தராக பணியாற்றும் சேதுராமனிடம் 9MM 5 Round ரக கைத்துப்பாக்கியை கொடுத்துள்ளார்.
இந்தக் கைத்துப்பாக்கியை சேதுராமன் கையாளும் போது துப்பாக்கியிலிருந்து எதிர்பாராவிதமாக தோட்டா ஒன்று வெளியேறி காவல்நிலைய பக்கவாட்டு சுவரில் பட்டது. இதனால் ஆம்பூர் கிராமிய காவல்நிலைய வளாகத்தில் சிறிது நேரம் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிங்க:தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் லட்சக்கணக்கான ரொக்கமும் பொருள்களும் பறிமுதல்