இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள், ரிசார்ட், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், நெடுஞ்சாலையோரம் உள்ள விடுதிகளில் 31.12.2020, 01.01.2021 ஆகிய இரண்டு தினங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையினரிடம் உரிமம் பெற்று இயங்கி வரும் மனமகிழ் மன்றம், நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் நடைபெறுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி செயல்படும் மதுபானக் கூடங்கள், நட்சத்திர ஓட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.