திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன் பாபு உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.
இந்நிலையில் பாபுவின் இரண்டாவது மனைவி சங்கீதாவின் வீட்டின் முன்கதவை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள் மிளகாய் பொடி தூவி பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு சங்கீதாவின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உமராபாத் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.