ETV Bharat / state

ஆம்பூரில் மேம்பாலம் கட்டும் பணி; அமைச்சர் ஆய்வு - Ambur flyover construction

திருப்பத்தூர்: ஆம்பூரில் புதிதாக கட்டப்படும் மேம்பால பணியினை வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி நேரில் பார்வையிட்டார்.

Min
Min
author img

By

Published : Aug 22, 2020, 6:46 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த அபிகிரிபட்டரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள கானற்று ஒடையால் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது மக்களுக்கு மிகுந்த சிரமமாக இருந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் கிராம் மக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் வீரமணி மேம்பாலம் கட்ட ரூ.26 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து தற்போது பணிகள் நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், மேம்பால பணிகளை அமைச்சர் வீரமணி பார்வையிட்டார்.

மேலும், அதே பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகி குமாரின் தந்தை படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு படத்தினைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட இளைஞரணி செயலாளர், வழக்கறிஞர் டில்லிபாபு, மாவட்ட விவசாயப் அணி செயலாளர் பொறியாளர் வெங்கடேசன், மாவட்ட இந்து அறநிலை துறை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.