ETV Bharat / state

தினசரி காய்கறி சந்தையில் அமைச்சர் நீலோபர் கபீல் ஆய்வு! - வாணியம்பாடி காய்கறி சந்தையை ஆய்வு செய்த நீலோபர் கபீல்

திருப்பத்தூர்: வாணியம்பாடி தினசரி காய்கறி சந்தையில் ஆய்வு செய்ய வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், அப்பகுதியில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்தவர்களை கண்டித்தார்.

ஆய்வு செய்த அமைச்சர் நீலோபர் கபீல்
ஆய்வு செய்த அமைச்சர் நீலோபர் கபீல்
author img

By

Published : Mar 29, 2020, 8:04 PM IST

வாணியம்பாடி தினசரி காய்கறி சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் மக்களிடையே இடைவெளி ஏற்படுத்த அந்தச் சந்தையை இரண்டாகப் பிரித்து வாணியம்பாடி கூடுதல் பேருந்து நிலையத்திற்கு மாற்றி காய் கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் இடைவெளிவிட்டு வாங்க வரையப்பட்டுள்ள வட்டத்திற்கு உள்ளே நின்றவாறு காய் கறிகளை வாங்கிச் சென்றனர். அப்போது அங்கு ஆய்வு செய்ய வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், தன் வீட்டிற்கு தேவையான காய் கறிகளை அங்குள்ள கடையில் வாங்கினார்.

ஆய்வு செய்த அமைச்சர் நீலோபர் கபீல்

அப்பகுதியில் இருந்த மற்றொரு கடையில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்துவருவதாக கூறப்பட்ட நிலையில், அங்கு சென்ற அமைச்சர் விற்பனை செய்பவரை அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்று கண்டித்து எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அங்கு ஒரு பலகை அமைத்து அதில் தினசரி விலைகளை எழுத வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க... தடையை மீறி சுற்றித் திரிவோருக்கு நூதன தண்டனை கொடுத்த காவல்துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.