ETV Bharat / state

கழிவுநீர் கால்வாய் பணி - அமைச்சர் ஆய்வு

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைத்தல் பணிகள் குறித்து அமைச்சர் நிலோஃபர் கபில் ஆய்வு மேற்கொண்டார்.

Minister inspected the sewerage canal work

author img

By

Published : Sep 4, 2020, 8:18 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீலிக்கொல்லை பகுதியில் 10, 11ஆவது வார்டு பகுதிகளில் 15 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சாலைப் பணிகள் இருக்க வேண்டும் என பணியாளர்களிடம் தெரிவித்த அவர், அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது நகராட்சி பொறியாளர் பாபு, நகர கழக செயலாளர் சதாசிவம், நகர பொருளாளர் தனராஜ், மாவட்ட சிறுபான்மை நலத்துறை கருத்தாளர் ஜீசான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.