திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கரோனோவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களை தனிமைப்படுத்தப்படுத்தினர். இவர்கள், தனியார் கல்லூரி, திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நேரில் சென்று அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். அத்தியாவசிய உணவு பொருள்களை வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ரயில்வே இன்டர்நெட் டவர் சரிந்து விழுந்ததால், சேதமடைந்த வீட்டிற்கு நேரில் சென்று உணவு, உடை உள்ளிட்டவற்றை வழங்கினார். நகர மையப்பகுதியான காதர் பேட்டை அருகில் குடியிருப்புப் பகுதியில், வீட்டின் மீது அமைக்கப்பட்டுள்ள ரயில்வே இன்டர்நெட் அவரை மாற்றியமைக்க வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியமிடம் ஆலோசனை வழங்கினார்.
ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சிக்குள்பட்ட சத்திரம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரோனா வைரஸ் தடுப்பு குறித்தும், போதுமான மருந்து, மாத்திரைகள் இருக்கின்றனவா எனவும் விசாரணை மேற்கொண்டார். இன்று பிறந்த குழந்தைக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தையும் அமைச்சர் வழங்கினார்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் நோயாளிகளுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை - அமைச்சர் வீரமணி