திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.
ஜோலார்பேட்டை அடுத்த என்ஜிஓ நகர் பகுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த 50க்கும் மேற்பட்டோர் அமைச்சரை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள், தங்கள் பகுதிக்கு பார்வையிட வரவேண்டாம் முழு தீர்வையும் உடனடியாக செய்ய வேண்டும் நீங்கள் பார்த்து விட்டு காரில் ஏறிச் சென்று விடுவீர்கள் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டினர்.
இதற்கு அமைச்சர் எ. வ. வேலு, நாங்கள் ஜீபூம்பா வேலை எல்லாம் செய்ய முடியாது. இரண்டு நாள்களில் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும். தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வாரி நீர் செல்ல வழிவகை செய்யப்படும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தங்குவதற்கான இடம் தயார் நிலையில் உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.
இதையும் படிங்க: கடும் வெள்ளத்தால் சாலை போக்குவரத்து துண்டிப்பு