திருப்பத்தூர்: ஜடையனூர் கிராமத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை மர்ம நபர்கள் நேற்று (ஜன.2) இரவு உடைத்து உள்ளனர். இதனை அறிந்த வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் அப்பகுதியில் குவிந்தனர்.
அப்போது போலீசாரிடம் சிலையை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மர்ம நபர்களை கைது செய்து விடுகிறோம் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் கைது செய்யப்படவில்லை எனில் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என அதிமுகவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடக்கம்