நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் வரும் மே மாதம் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
மதுக்கடைகள் மூடப்படுவதால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையிலுள்ள மதுக்கடையில் மது பிரியர்கள் அதிகமாக குவிந்து, அட்டைப் பெட்டிகளில் மளிகை சாமான்கள் வாங்கி அடுக்குவது போல் மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
கரோனா தொற்று பரவும் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் மது பிரியர்கள் முகக்கவசம் அணியாமல் ஆர்வமுடன் அதிகமான மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.