ETV Bharat / state

வாணியம்பாடி அருகே முறையற்ற உறவில் இருந்த ஜோடி தற்கொலை.. நடந்தது என்ன? - vaniyambadi news

Tirupattur illegal affair: வாணியம்பாடி அடுத்த தேங்காய் பட்டறை பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில், முறையற்ற உறவு விவகாரத்தில் ஆண் மற்றும் பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 perople commited sucide due to fake love

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 8:29 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேங்காய் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(40). இவருக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கர்நாடகா மாநிலம், வைட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி பூஜா(26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், சந்திரசேகர் வேலைக்குச் சென்ற இடத்தில் பூஜாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர்,திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூஜா, சந்திரசேகருடன் வாணியம்பாடி அடுத்த தேங்காய் பட்டறை கிராமத்தில் உள்ள செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இதற்கிடையில், இவர்கள் வாணியம்பாடியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் வாழ்ந்து வருவது, பூஜாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை பூஜாவின் பெற்றோர் வாணியம்பாடியில் உள்ள தென்னந்தோப்பிற்கு விரைந்து, அவரை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல முற்பட்ட போது, சந்திரசேகர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அதே தோப்பில் மற்றொரு கிணற்றில் குதித்து பூஜா தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் இவர்களது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு என மனைவி புகார்.. விசாரணைக்கு பயந்து தற்கொலை.. பூந்தமல்லியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.