திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், தனது சொந்த பணத்தில் தொகுதி மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையை அர்ப்பணித்தார்.
இதனைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
பின்னர் 2021ஆவது புத்தாண்டை, அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
இதையும் படிங்க: புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் மணல் சிற்பம்!