ETV Bharat / state

விவசாய நிலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் - thirupattur district news in tamil

ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே விவசாய நிலத்தில் நகராட்சி அலுவலர்கள் போட்ட தற்காலிக பாதையால் விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி நின்று விவசாயம் செய்ய இயலாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

jolarpet-farmers-criticized-jolarpet-corporation-officials
நகராட்சி அலுவலர்களால் விவசாய நிலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்!
author img

By

Published : Jul 11, 2021, 9:50 AM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை குடியானகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகன் மைவண்ணகுமார்(65). இவருக்கு, ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலத்தின், அருகே கடந்த ஆட்சியில் மங்கம்மாள் என்ற குளம் நிறுவப்பட்டது.

ஆனால், குளம் தோண்டிய மண்ணை மைவண்ணகுமார் நிலத்தின் அருகே கொட்டி குளத்திறக்குச் செல்ல தற்காலிக சாலை அமைக்கப்பட்டதாக தெரிகிறது. மங்கம்மாள் குளம் அமைக்கப்பட்ட இடம் மைவண்ணகுமாரின் இடத்தைவிட உயரமானதால் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் மழைநீர் தாழ்வான பகுதியான மைவண்ணகுமார் நிலத்தில் கால் முட்டி அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

நகராட்சி அலுவலர்களால் விவசாய நிலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்!
jolarpet farmers criticized jolarpet corporation officials
விவசாய நிலத்தில் தேங்கி நிற்கும் நீர்

மழைநீர் தேங்கி நிற்பதால் தன்னால் விவசாயம் செய்யமுடியவில்லை எனவும் இதனால், தனது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மைவண்ணகுமார் தெரிவிக்கிறார்.மேலும், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குளம் நிறுவப்பட்டபோது இது தற்காலிக பாதை என்றே நகராட்சி அலுவலர்கள் தெரிவித்ததாகவும், தற்போது, இதனை அகற்ற முடியாது என அவர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேகதாது அணையை எதிர்த்து திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.