திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டியில் வசித்து வரும் கருணாமூர்த்தி மகன் கார்த்திக் (11), அன்பு மகன் உமேஸ்வரன்(11) மற்றும் ராஜ்குமார் மகன் யவன்(11), குருநாதன் மகன் ஹரிஷ் (8) ஆகிய 4 பேரும் முத்தம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
காலையில் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நேற்று முத்தம்பட்டியில் திருவிழா நடைபெற்றுள்ளது. வாண வேடிக்கையில் மழையின் காரணமாக சில பட்டாசுகள் வெடிக்காமல் இருந்துள்ளது.
இதனையடுத்து 4 மாணவர்களும் ஒரே இடத்தில் வைத்து அதனை வெடிக்கச் செய்துள்ளனர். அது பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக மாணவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் கார்த்திக் என்ற மாணவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டு மேல்சிகிச்சைக்காகச் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற மூன்று மாணவர்களையும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு: மழைதான் காரணமாம்..