திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த 3ஆம் தேதி வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இருவர், அலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
உடனடியாக வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் இரு சக்கர வாகன எண்ணை தெரிவித்து, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து இன்று (ஜூன்.9) பெருமாள் பேட்டை பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், அலைபேசி வழிப்பறியில் ஈடுபட்டவர்களின் இருசக்கர வாகனம் பிடிபட்டது. விசாரணையில் நால்வர் ஒன்று சேர்ந்து, தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் செல்பவர்களின் அலைபேசிகளை வழிப்பறி செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இருசக்கர வாகனமும், அலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : போலிக் கணக்கு தொடங்கிய நபருக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்விராஜ்