ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுகவினர் தயாராக வேண்டும்- முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்

வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும் என முன்னாள் இதில் முன்னாள் வணிகவரி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.

Breaking News
author img

By

Published : Jul 18, 2021, 11:16 PM IST

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை ஒன்றியம், நகரம் சார்பில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் முன்னாள் வணிகவரி, பத்திரப்பதிவு துறை அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி. வீரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

அப்போது நிர்வாகிகளிடையே பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, "ஜோலார்பேட்டை தொகுதியில் சொற்ப வாக்குகளில் தோற்றதற்கு நிர்வாகிகளின் கவன குறைவே காரணம். வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. இந்த நாட்டில் இந்திராகாந்தி, காமராஜர் ஜெயலலிதாவும் தோல்வி கண்டனர்.

ஆனால் அவர்கள் துவண்டுவிடவில்லை. அவர்கள் வழியில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று இழந்ததை மீண்டும் பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில், தொண்டர்கள் தயாராக வேண்டும்." என்றார்.

இதையும் படிங்க: 'தேர்வில் தோல்வியா? இந்தாங்க இலவச அறை...' - கலக்கும் காட்டேஜ் உரிமையாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.