திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் காரணமாக பாலாற்று படுகைகளில் நீர்மட்டம் 1,000 அடியிலிருந்து 1,500 அடி கீழ் மட்டத்திற்குச் சென்றது. இதனால் கோடை காலத்திற்கு பின்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இடர் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக வாணியம்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திம்மாம்பேட்டை, அலச்சந்திராபுரம், நாராயணபுரம், அம்பலூர் பகுதிகளில் மழை பெய்து வந்தது.
இந்நிலையில், பாலாற்றின் கிளை ஆறுகளான மண் ஆறு, காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வாணியம்பாடியைச் சுற்றியுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் தேவை பெருமளவு பூர்த்தியாகியுள்ளது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கினால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாலாற்றின் கிளை ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பெய்த மழையால் பாலாற்றின் கிளை ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.