ETV Bharat / state

கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது: 7.55 லட்சம் ரூபாய் பறிமுதல் - திருப்பத்தூரில் கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வீட்டில் கள்ளத்தனமாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்த இரண்டு நபர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஏழு லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.

கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது
கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது
author img

By

Published : Mar 9, 2020, 11:28 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் சைன் பகுதியில் கள்ளநோட்டுகள் அதிகளவு புழக்கத்தில் இருப்பதாக சைன் பகுதி காவல் துறையினருக்குப் புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரியவந்தது. மேலும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் கள்ளநோட்டு அச்சடிப்பதாகவும், அவரிடமிருந்த ஒரு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக அப்பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

உடனே தமிழ்நாடு விரைந்த மகாராஷ்டிரா காவல் துறையினர், தமிழ்நாடு காவல் துறையினரின் உதவியுடன் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் வசிக்கும் சரவணனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு, கள்ள நோட்டு அச்சடிப்பதற்கான உபகரணம், இயந்திரம், ஏழு லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.

கள்ள நோட்டுகளை அச்சடித்தவர்கள் கைது

பின்னர், சரவணன், பாஸ்கரன் ஆகியோரைக் கைதுசெய்த மகாராஷ்டிரா காவல் துறையினர், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை முன்னிலைப்படுத்தி மகாராஷ்டிரா காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதையும் படிங்க: லட்சக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகள் கோவையில் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.